1. செங்கல், M-சாண்ட், P-சாண்ட் தவிர அனைத்து மெடீரியல்களும் ISI தரம் உடைய கட்டிட பொருள்கள் மட்டுமே கட்டுமானம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
2. உடலில் பிளாஸ்டிக் நஞ்சு கலந்து விடாமல் இருப்பதற்காக மேல்நிலைதொட்டி செங்கற்களால் கட்டப்பட்டு உடல் நலம் பாதுகாக்கப்படுகின்றது.
3. வீட்டிற்குள் குளிர்ச்சி ஏற்படுத்தவும், உடல் உஷ்ணம் தடுப்பதற்காகவும் பழைய கால முறைப்படியிலான செங்கற்பொடியும், கடுக்காய், கருப்பட்டி, சுண்ணாம்பு கலந்து சுருக்கி போடப்படுகிறது.
4. புட்டிங் கான்கிரீட், பிளிந்த் பீம் கான்கிரீட், தூண்கள் அனைத்தும் சாக்கு போட்டுத்தான் தண்ணீர் ஊற்றி கியூரிங் செய்யப்படுகிறது.
5. அனைத்து சிமெண்ட் கலவையும் பிளாட்பார்மில் குறைந்தது மூன்று தடவை நன்றாக கலக்கப்பட்ட பின்புதான் எடுத்து பயன்படுத்தப்படுகிறது. அனுபவம் வாய்ந்த மேஸ்திரி ஆட்களை கொண்டு கட்டுமானம் செய்யப்படுகிறது.
6. கலவைகள் மேசன் பயன்படுத்தும் சட்டியில் போதுமான அளவு தண்ணீருடன் கலந்த பின்பு மேசன் கரண்டியின் மூலம் தான் செங்கல் வரியின் மேல் கலவை பயன்படுத்தப்படுகிறது.
7. அனைத்து கான்கிரீட் செங்கல் கட்டிடம் மற்றும் பூச்சு வேலைகள் கட்டி முடிக்கப்பட்ட தேதிகள் பெய்ண்டினால் குறிக்கப்பட்டு 7 நாட்களுக்கு தொடர்ந்து தினமும் கியூரிங் செய்யப்படுகிறது.
8. ரூப் கான்கீரீட் குறைந்தது 21 நாட்களுக்கு பாத்தி கட்டி தண்ணீர் நிறுத்தி கியூரிங் செய்யப்படுகிறது.
9. அனைத்து விதமான கான்கீரீட் வேலைகளும் மிக்செர் மெசின் பயன்படுத்தப்படுகிறது.
10. கட்டுமான வேலைகள் அனைத்தும் VP KENNADY INFRON–ன் தர ஆய்வுகளால் தொடர்ந்து சரி பார்க்கப்படுகிறது.
11. வாடிக்கையாளர்கள் நாங்கள் உபயோகபடுத்தும் கட்டிட பொருட்கள், பிளம்பிங், எலக்ட்ரிகல், கதவுகள் மற்றும் அனைத்து விதமான பொருட்களையும் எந்த நேரத்திலும் பரிசோதனை செய்து அதன் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
12. கட்டிடத்தின் தரம் மற்றும் உபயோகப்படுத்தபடும் பொருள்களின் தரத்தை அறிய தங்களுக்கு தெரிந்த கட்டிட பொறியாளர்கள் யாரைவேண்டுமானாலும் அழைத்து வந்து செய்து கொள்ளலாம்.